தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

7 ஆண்டுகளாக மிக மோசமாக உள்ள வசப்புத்தூர்-நடராஜபுரம் சாலை! கிராம மக்கள் அவதி

சிதம்பரம் அருகே வசப்புத்தூர்- நடராஜபுரம் வரையில் சுமார் நாலரை கிலோ மீட்டர் சாலை உள்ளது. இச்சாலை குண்டும், குழியுமாக செப்பணியிடப்படாமல் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2013, 10:49 am

ஜி.சுந்தரராஜன்

கடந்த 7 ஆண்டுகளாக மிக மோசமாக உள்ள வசப்புத்தூர்- நடராஜபுரம் சாலையினால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அச்சாலை பள்ளத்தில் விழுந்து காயமுற்ற மாணவி ஒருவர் இருகால்களும் அகற்றப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

சிதம்பரம் அருகே வசப்புத்தூர்- நடராஜபுரம் வரையில் சுமார் நாலரை கிலோ மீட்டர் சாலை உள்ளது. இச்சாலை குண்டும், குழியுமாக செப்பணியிடப்படாமல் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இச்சாலை மோசமானதற்கு காரணம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நடராஜபுரம் கூட்டு குடிநீர் திட்டம், வடுகத்தெருமேடு கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களுக்கு வசப்புத்தூர் சாலையின் ஓரம் பள்ளிம் தோண்டப்பட்டு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்கள் நீர்அழுத்தம் அடிக்கடி உடைப்பெடுத்து சாலை பாதிப்புள்ளாகியது. இதனால் அடிக்கடி சாலை சேதமுறுவதால் 7 ஆண்டுகளாக சாலை செப்பணியிடப்படாமல் உள்ளது. சாலை அமைக்க ரூ.3 கோடி 88 லட்சத்திற்கு கடந்த மே 2013 மாதம் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படாமலேயேஉள்ளது.

சாலை செப்பணியிடப்படாததால் இரண்டு அரசு பேருந்துகளும் (தடம் எண்:35, தடம் எண்:14) கிராமத்திற்குள் வர மறுக்கின்றனர். இதனால் கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பேருந்து வசதி இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி நடந்தும், இரு சக்கர வாகனங்களிலும் செல்லும் நிலை உள்ளது. அண்மையில் இச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவி பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டு இரண்டு கால்களும் அகற்றப்பட்டதாக கிராம மக்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஊர்மக்கள் பல முறை மாவட்ட ஆட்சியரிடமும், நெடுஞ்சாலைத்துறையினரிடம் முறையிட்டு எவ்வித நடவடிக்கை இல்லை என்கின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் நலன் கருதி கடலூர் மாவட்டம் நிர்வாகம் போர்க்கால் அடிப்படையில் டெண்டர் விடப்பட்டுள்ள இச்சாலையினை அமைக்க உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.