ஏலச் சீட்டு நடத்தி ஏமாற்றிய கணவன் மனைவி கைது
சென்னை கோவூர் பாலகிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் ராமமூர்த்தி. இவரது மனைவி உமா மகேஸ்வரி. கணவன்–மனைவி இருவரும் பதிவு செய்யப்படாத மாதாந்திர ஏலச் சீட்டு நடத்தினார்கள்.


சென்னை கோவூர் பாலகிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் ராமமூர்த்தி. இவரது மனைவி உமா மகேஸ்வரி. கணவன்–மனைவி இருவரும் பதிவு செய்யப்படாத மாதாந்திர ஏலச் சீட்டு நடத்தினார்கள்.
அவர்களிடம் அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த புருஷோத்தமன் உள்ளிட்ட 31 பேர் ஏலச் சீட்டில் சேர்ந்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் வரை பணம் பெற்றுள்ளனர். சீட்டு முடியும் தருவாயில் கணவன்–மனைவி இருவரும் இரவோடு இரவாக வீட்டை பூட்டி விட்டு ஓடி விட்டனர். சீட்டு பணத்தை இழந்தவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க கமிஷனர் உத்தரவிட்டார். தனிப் படை அமைக்கப்பட்டு போலீசார் அவர்களை தேடி வந்தனர். ராமமூர்த்தி, உமாமகேஸ்வரி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து பூந்தமல்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பொதுமக்கள் தங்கள் பணத்தை பதிவு செய்யப்படாமல் நடத்தப்படும் சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...