கொள்ளிடக்கரையில் கள்ளச்சாராயக்கடையை பொதுமக்கள் அகற்றம்
சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சி.அரசூர் கிராமத்தில் கொள்ளிடக்கரையில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதி


சிதம்பரம் அருகே கொள்ளிடக்கரையில் நடைபெற்று வந்த கள்ளச்சாராயக்கடையை திங்கள்கிழமை பொதுமக்களே திரண்டு சென்று அகற்றினர்.
சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சி.அரசூர் கிராமத்தில் கொள்ளிடக்கரையில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் குமராட்சி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. சாராயக்கடையினால் பாதிக்கப்பட்ட சி.அரசூர் கிராம பொதுமக்கள் திங்கள்கிழமை ஒன்று திரண்டு கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு சென்று அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி சாலையில் போட்டு உடைத்தெரிந்தனர். சாராயம் விற்பனையில் ஈடுபட்டவர்கள் பொதுமக்கள் திரண்டு வருவதால் தப்பி ஓடிவிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதேபோன்று கொள்ளிடக்கரையில் தில்லைநாயகபுரம், ஆழங்காத்தான், ம.உடையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கள்ளச்சாராயம் அமோகமாக விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...