மீண்டும் பணி வழங்கக்கோரி மக்கள் நலப் பணியாளர்கள் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் 36 பெண்கள் உள்பட 69 பேரை போலீசார் கைது செய்தனர்.
மீண்டும்பணி வழங்கக்கோரி மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் சார்பில் அக்.2 ஆம் தேதி கன்னியாகுமரியிலிலருந்து சென்னை வரையிலான வேலை பிச்சை கேட்டு வீதியெங்கும் நடைபயணப் போராட்டம் சிவகங்கை அரண்மனைவாசல் அருகே நடைபெற்றது.
போராட்டத்திற்கு சங்க மாநிலத் தலைவர் நல்.செல்லப்பாண்டியன், மாநில செயலாளர் பா.காந்தி ஆகியோர் தலைமை வகித்தனர். சிவகங்கை மாவட்டத் தலைவர் பூ.செல்வம், செயலாளர் இரா.சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் குமரேசன், மாவட்ட செயலாளர் நிர்மல்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மெய்யப்பன்,சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் பி.பாண்டி, நெடுஞ்சாலைத் துறை சங்க மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
பணிநீக்கம் செய்யப்பட்ட 13ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி நூதன முறையில் வீதியெங்கும் வேலை பிச்சை கேட்டு நூதனப் போராட்டத்தை நடத்தினர். அரண்மனை வாசல் அருகே மறியலில் ஈடுபட்ட 36 பெண்கள் உள்பட 69 பேரை போலீசார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

