திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

தமிழக மீனவர்களின் காவல் 28ம் தேதி வரை நீட்டிப்பு

புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 23 பேரின் சிறைக் காவல் அக்டோபர் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 அக்டோபர் 2013, 7:28 am

புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 23 பேரின் சிறைக் காவல் அக்டோபர் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 19ம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேரின் சிறைக் காவல் இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து, யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டனர். அதேப்போல, இலங்கை கடலோரக் காவல்படையினரால் அக்டோபர் 3ம் தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர்  இலங்கை ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 23 தமிழக மீனவர்களின் காவல் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்து மீனவர்களும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.