விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஸ்ரீவில்லிபுத்தூர் : திருட்டுக் காரை திருடிய இரு இளைஞர்கள் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருட்டுக் காரை திருடிச் சென்ற இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :14 அக்டோபர் 2013, 5:35 am

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருட்டுக் காரை திருடிச் சென்ற இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் -டி.கல்லுப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் நத்தம்பட்டி காவல் சோதனைச் சாவடியில் திங்கள்கிழமை அதிகாலை சிறப்பு சார்பு ஆய்வாளர் துரைப்பாண்டி, தலைமைக் காவலர்கள் காளிமுத்து, பூங்காவனம் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற டாடா சுமோ காரை நிறுத்தினர். அதில் இருந்த இரு இளைஞர்களும் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வண்டியை ஓரமாக நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்கள். மேலும் காரில் பக்கவாட்டில் வாடகைக் காருக்கான மஞ்சள் நிறத்தில் ஒரு பதிவு எண் எழுதப்பட்டு சுரண்டப்பட்டிருந்ததும், முன்பக்கமும், பின் பக்கமும் சொந்த வண்டிக்கான வெள்ளை நிறத்தில் வேறொரு பதிவு எண் எழுதப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து வண்டியையும், மது அருந்திவிட்டு வண்டியை ஓட்டி வந்த இருவரையும், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு போலீஸார் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இளைஞர்கள் பெயர் ராஜேஸ் (27) மற்றும் அவரது நண்பர் டில்லிராஜா (32) என்பது தெரிய வந்தது. ராஜேஸூம், டில்லிராஜாவும் வண்ணாரப்பேட்டையில் இரும்புக் கடையில் வேலை செய்து வருகிறார்கள்.

ராஜேஸ் கடந்த வியாழக்கிழமை தாயில்பட்டியில் குல தெய்வத்தை கும்பிடுவதற்காக குடும்பத்துடன் வந்துள்ளார். பின்னர் வெள்ளிக்கிழமை தளவாய்புரத்தில் உள்ள பாட்டி வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு இருந்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு தளவாய்புரம் பஸ்நிலையத்தில் இந்த டாடா சுமோ ஸ்டார்ட் செய்த நிலையில் நின்று கொண்டிருந்ததாயும், டிரைவர் இல்லாததைப் பார்த்து இவர்கள் வண்டியை எடுத்து வந்ததாயும், வழியில் டீசல் போட்டுவிட்டு சென்னைக்கு சென்று கொண்டிருந்ததாயும் தெரிவித்தனர். மேலும் தாங்கள் வண்டியின் நம்பர் பிளேட்டில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்றும் கூறினர்.

நெல்லை மாவட்டம் புளியங்குடியில் ஒரு டாடா சுமோ கார் சில நாட்களுக்கு முன்னர் காணமல் போயுள்ளது. எனவே இந்த காரை யாரோ திருடி தளவாய்புரத்தில் நிறுத்திச் சென்றுள்ளார்களா? என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். புளியங்குடி போலீஸார், ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் டி.கல்லுப்பட்டியில் பெட்ரோல் பங்கில் இருந்து ஒரு டாடா சுமோ கார் திருடு போனது குறிப்பிடத்தக்கது. திருட்டுக் காரைத் திருடி வந்த இரு இளைஞர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.