காவிரி டெல்டா பாசன கடை, மடை பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் போதிய நீரின்றி காய்ந்து கருகி வருகின்றன. மேட்டூரில் போதுமான நீர் இருந்தும் கடை, மடை பகுதிகளும் பாசனம் பெறும் வகையில் நீர் மேலாண்மை செய்யப்படவில்லை. வீராணம்ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் அரசு இங்குள்ள நிலங்களுக்கு பாசன நீரை தர மறுத்து வருகிறது. வேளாண் பாசனத்திற்கு போக மீதமுள்ள நீரை சென்னைக்கு கொண்டு செல்வது என்ற தமிழக முதல்வர் கொடுத்த உறுதிமொழியை மீறும் செயலாகும். எனவே தமிழக முதல்வர் மேட்டூரிலிருந்து கூடுதல் நீரை திறந்து விட ஆணையிட்டு டெல்டா பாசன கடை, மடை பகுதிகளில் உள்ள பயிர்களை காப்பாற்ற வேண்டும். அதே வேளையில் கர்நாடகஅரசு நமக்கு தர வேண்டிய 62 டிஎம்சி நீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் சி.ஆறுமுகம்.