தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரத்தில் வேகமாக பரவும் ஆபாச எஸ்.எம்.எஸ்: போலீஸில் பொதுமக்கள் புகார்!

சிதம்பரம் நகரில் வேகமாக பரவும் ஆபாச குறுந்தகவலால் (எஸ்எம்எஸ்) பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து நகர காவல் நிலையத்தில் பல்வேறு புகார்கள் வந்துள்ளது.

News image
Updated On :16 அக்டோபர் 2013, 12:29 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் வேகமாக பரவும் ஆபாச குறுந்தகவலால் (எஸ்எம்எஸ்) பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து நகர காவல் நிலையத்தில் பல்வேறு புகார்கள் வந்துள்ளது.

சிதம்பரம் நகரில் கடந்த சில தினங்களாக செல்போன் மூலம் பலருக்கு பல்வேறு நம்பர்களில் (நம்பர்க: 8526845790, 8508362151, 8438108021) இருந்து ஆபாச குறுந்தகவல்கள் வருகிறது. குறிப்பாக சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் ஸ்தானிகர் மற்றும் பூசாரி, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பல்வேறு எண்களிலிருந்து ஆபாச குறுந்தகவல்கள் வந்தவாறு இருந்துள்ளது. இதனால் வேதனையுற்ற அவர்கள் பொறுக்கமுடியாமல் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்துள்ளனர்.

புகாரை விசாரித்த காவல் ஆய்வாளர் சம்பந்தப்பட்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் போனை எதிர்தரப்பில் எடுக்கவில்லை. ஆனால் சிறுது நேரத்தில் போலீஸாருக்கும் ஆபாச குறுந்தகவல் அந்த நம்பரிலிருந்து அனுப்பப்பட்டது கண்டு அதிர்ச்சியுற்றனர். இது தொடர்பாக சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் விசாரணை மேற்கொண்டதில் சுமார் 15-க்கும் மேற்பட்ட எண்களிலிருந்து இதுபோன்ற ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.