திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

தொழில்நுட்பக் கோளாறு : ரோந்து ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்

ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புதன்கிழமை காலை அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Updated On :16 அக்டோபர் 2013, 7:21 am

ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புதன்கிழமை காலை அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ராமேஸ்வரம் அடுத்த ராமநாதபுரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலுக்கு பயங்கரவாத மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று காலை பாக் ஜலசந்தி தலைமன்னார் கடல் பகுதியில் ரோந்து பணிக்கு சென்ற  ஐஎன் 481 ரக ஹெலிகாப்டரில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து,  தனுஷ்கோடி அருகே அரிச்சல் முனையில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதிருஷ்டவசமாக ஹெலிகாப்டரின் விமானி, துணை விமானி உட்பட 3 பேர் உயிர் தப்பினர். உடனடியாக உச்சிப்புளியில் உள்ள கடற்படை முகாமுக்கு தகவல் தெரிவக்கப்பட்டு பொறியாளர்கள் விரைந்து வந்து ஹெலிகாப்டரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.