சிவகங்கை அருகே மூதாட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் ஒன்றியம், ராகினிபட்டியில் வசித்து வருபவர் பாலசுப்ரமணியன். இவர் சிவகங்கை அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றார். இவரது மனைவி விஜயா (64). இவர் கொல்லங்குடி அங்கன்வாடியில் ஆயாவாக வேலை பார்த்து ஓய்வு பெற்றார். இவர்களுக்கு திருப்பூரில் வசித்து வரும் அருணா கற்பகவள்ளி என்ற மகளும், பெங்களூரில் வசித்து வரும் அருணா காளீஸ்வரன் மற்றும் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் அருணா சொர்ணவள்ளியப்பன் என்ற மகன்களும் உள்ளனர்.
வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை கோவிலுக்கு பாலசுப்ரமணியன் சென்றிருந்தாராம். அப்போது வீட்டில் தனியாக விஜயா மட்டும் இருந்துள்ளார். சனிக்கிழமை காலை பாலசுப்ரமணியன் வீட்டுக்கு திரும்பி வந்த போது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் விஜயா படுகொலை செய்யப்பட்டதும் அவர் அணிந்திருந்த 15 பவுன் சங்கிலியும் காணாமல் போனது தெரிய வந்ததாம். இது குறித்து நகர் போலீஸில் பாலசுப்ரமணியன் கொடுத்த புகாரின் பேரில் சாம்ராட் என்ற மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் துறை போலீஸார் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் சிவக்குமார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

