புதுச்சேரியிலிருந்து மதுப்பாட்டிகள் கடத்திய பெண் கைது
உளுந்தூர்பேட்டை வட்டம் எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு


உளுந்தூர்பேட்டை அருகே புதுச்சேரியிலிருந்து மதுப்பாட்டிகள் கடத்திய பெண்ணை எலவனாசூர்கோட்டை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை வட்டம் எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு தன்ராஜ் மற்றும் போலீஸார் எலவனாசூர்கோட்டை பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரி மாநிலம் மடுகரையிலிருந்து மதுபாட்டிகளை வயிற்றில் கட்டிக்கொண்டு எறையூருக்கு விற்பனை செய்வதற்கு வந்த மடுகரை ரங்கநாதன் மனைவி அஞ்சலை(65) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 50 பிராந்தி பாட்டிகளை பறிமுதல் செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...