யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தீபாவளியையொட்டி நவம்பர் 1-ம் தேதி நியாய விலைக் கடைகள் செயல்படும்

வேலைக்குச் செல்லும் பொதுமக்களின் நலன் கருதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகள் செயல்படும் என்று அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதற்காக வெள்ளிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு

News image
Updated On :21 அக்டோபர் 2013, 1:28 pm

தங்கராஜா

தீபாவளி பண்டிகை வருவதை அடுத்து நவம்பர் 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

 வேலைக்குச் செல்லும் பொதுமக்களின் நலன் கருதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகள் செயல்படும் என்று அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதற்காக வெள்ளிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நவம்பர் 2-ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள், குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை முன்கூட்டியே வாங்கக் கூடும் என்பதால் நவம்பர் 1-ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

 அதற்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை நவம்பர் 1-ம் தேதியும் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் க.மகரபூஷணம் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.