மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஜாதிச்சான்றிதழ் வழங்க இருளர் இன மக்கள் கோரிக்கை

கடலூர் ஒன்றியம் கீழ்அழிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த இருளர்கள் 20-பேர்   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலர் ராமு தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் பா.மனோகரனிடம் திங்கள்கிழமை

Updated On :22 அக்டோபர் 2013, 10:38 am

ஜாதிச்சான்றிதழ் வழங்க இருளர் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் ஒன்றியம் கீழ்அழிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த இருளர்கள் 20-பேர்   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலர் ராமு தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் பா.மனோகரனிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில்,

கீழ்அழிஞ்சிப்பட்டு கிராமத்தில் இருளர் இனத்தை சேர்ந்த 26 குடும்பங்கள் 3 தலைமுறையாக வசித்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் மிகவும் மோசமாக நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.ரேஷன் கார்டு, சாலை வசதி, குடிநீர், மின் விளக்கு, மனைப்பட்டா, சுகாதாரம் போன்ற எவ்விதமான அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க மறுக்கிறார்கள். இதனால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அனைவருக்கும் ஜாதிச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.