தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பஸ் நிலையத்தில் டிரைவரை தாக்கிய இரு சக்கர வாகன ஓட்டி கைது

சிதம்பரம் அருகே உள்ள கருப்பூரைச் சேர்ந்தவர் நடராஜன் (38). இவர் அரசு பஸ் டிரைவராக உள்ளார். புதன்கிழமை காலை கீழரதவீதி பஸ்நிறுத்தத்தில் வேறு ஒரு பஸ் நின்றதால், அந்த பஸ்ஸை முந்தி நடராஜன்

News image
Updated On :23 அக்டோபர் 2013, 12:29 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் தன்னை மோதுவது போல் சென்றதால் ஆத்திரமடைந்த இரு சக்கர வாகன ஓட்டி அரசு பஸ் டிரைவரை கடுமையாக தாக்கியதால் நகர போலீஸாரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

சிதம்பரம் அருகே உள்ள கருப்பூரைச் சேர்ந்தவர் நடராஜன் (38). இவர் அரசு பஸ் டிரைவராக உள்ளார். புதன்கிழமை காலை கீழரதவீதி பஸ்நிறுத்தத்தில் வேறு ஒரு பஸ் நின்றதால், அந்த பஸ்ஸை முந்தி நடராஜன் சென்றுள்ளார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த சிதம்பரம் நந்தவனம் பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் (28) மீது பஸ் மோதுவது போல் சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அன்புராஜ் பஸ்ஸை துரத்திச் சென்று பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர் நடராஜன் மோட்டார் சைக்கிள் சாவியால் தலை மற்றும் கழுத்து பகுதியில் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் காயமுற்ற டிரைவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து இரு சக்கர வாகன ஓட்டி அன்புராஜை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.