பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

குரூப் 1 பிரதான தேர்வு: 84 சதவீதம் பேர் பங்கேற்பு

துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. இப்போது காலியாகவுள்ள 25 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. பிரதானத் தேர்வுக்கு

News image
Updated On :25 அக்டோபர் 2013, 2:35 pm

கே.பாலசுப்பிரமணியன்

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குரூப் 1 பிரதானத் தேர்வை 84 சதவீதம் பேர் எழுதியதாக தேர்வாணைய தலைவர் நவநீத கிருஷ்ணன் தெரிவித்தார்.

துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. இப்போது காலியாகவுள்ள 25 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. பிரதானத் தேர்வுக்கு ஆயிரத்து 372 பேர் தேர்வு பெற்றிருந்தனர். சென்னையில் பிரதானத் தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. 14 மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.இந்தத் தேர்வினை 115 பேர் எழுதவில்லை. மொத்தம் 84 சதவீதம் பேர் எழுதியதாக தேர்வாணையத் தலைவர் தெரிவித்தார்.

தேர்வு எப்படி இருந்தது குரூப் 1 பிரதானத் தேர்வு மூன்று நாட்கள் நடைபெறுகின்றன. முதல் நாளில் நடைபெற்ற தேர்வு 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டது. அதில் 3 மதிப்பெண் கேள்விகள் 30-ம், 8 மதிப்பெண் கேள்விகள் 15-ம், 15 மதிப்பெண் கேள்விகள் ஆறும் கேட்கப்பட்டிருந்தன.கேள்விகள் அனைத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வைப் போன்று இருந்ததாக தேர்வர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.