தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நூற்றாண்டு விழா காணும் கூட்டுறவு தந்தை ஆர்.கனகசபைபிள்ளை!

உலக மக்கள் எல்லோரும் அன்புடன் ஒற்றுமையால் வாழ்வதற்கு இன்றியமையாத நீதியையும், தருமத்தையும் எப்பொழுதும் விரும்பி பேமும் நல்ல உள்ளத்துடன் பிறர்க்கும், தமக்கும் பயன்பட வாழும் பெரியோரின்

News image
Updated On :26 அக்டோபர் 2013, 9:41 am

ஜி.சுந்தரராஜன்

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்பு பாராட்டும் உலகு (திருக்குறள்-994)

உலக மக்கள் எல்லோரும் அன்புடன் ஒற்றுமையால் வாழ்வதற்கு இன்றியமையாத நீதியையும், தருமத்தையும் எப்பொழுதும் விரும்பி பேமும் நல்ல உள்ளத்துடன் பிறர்க்கும், தமக்கும் பயன்பட வாழும் பெரியோரின் நற்குணங்களை உலகத்தார் யாவரும் பாராட்டி போற்றுவார்கள்.  இத்தகைய குறளுக்கு இலக்கனமாக திகழ்ந்தவர் ஆர்.கே என செல்லமாக அனைவராலும் ழைக்கப்படும் ஆர்.கனகசபை பிள்ளை.

நல்ல உயரம், முழங்கால் வரை நீண்ட கைகள், கதர்வேட்டி, காலர் இல்லாத வெள்ளை முழுக்கை கதர் ஜிப்பா, கனிவு தழுவிய தோற்றம் கொண்டவர் கூட்டுறவுத் தந்தை என்றழைக்கப்படும் ஆர்.கனகசபைபிள்ளை. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கே.ஆடூர் கிராமத்தில் 1913-ம் ஆண்டு எம்.ரத்தினசபாபதிபிள்ளை-ஆர்.ராசாம்பாள் தம்பதியினருக்கு பிறந்தவர் ஆர்.கனகசபை பிள்ளை. இவர். 1947 முதல் 52 வரை சிதம்பரம் நகரமன்றத் தலைவராகவும், 1950-52, 1957-67 ல் 12 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 1967-71 வரை சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சிவி ரெட்டி, முன்னாள் பிரதமர்கள் ஜவகர்லால்நேரு, இந்திராகாந்தி மற்றும் மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜ், தந்தை பெரியார், பி.டி.ராஜன், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரிடம் நன்மதிப்பை பெற்றிருந்தவர்.

மென்மையான மனசு, கலகலப்புடன் கூடிய பேச்சு, காட்சிக்கு எளிமை, யாரும் எப்போதும் அணுகலாம், உதவி கேட்கலாம். அதே சமயத்தில் முடியாததை கேட்பவர் மனம் நோகாத வகையில் பதில் கூறுவது அவரது தனித்தன்மை. அவரை நாடி வந்தவர்கள் குழப்பம் இல்லாமல் மன நிறைவுடன் திரும்புவார்கள். சாந்தமாகவே எடுத்து விளக்கி கூறி மக்களிடத்தே அவர் மீது ஒருவித ஈர்ப்பு சக்தி நிலவியது.  ஆங்கிலத்தில் CHERISMA என்பார்கள். வடமொழியில் வசீகரம் என்பார்கள். அதனால் அனைவரும் அவரை ஆர்.கே என செல்லமாக அழைத்து மகிழ்ந்தனர்.  இவர் அடையாறு தியாசபிகல் சொசைட்டி மெட்ரிகுலேஷன் படிப்பு முடித்தவர். அங்கு உடன் பயின்றி முன்னாள் குடியரடுத் தலைவர் நீலம் சஞ்சிவி ரெட்டி இவரது தோழராவார். இவர் எப்போதும் புத்தகம் படி்துக் கொண்டே இருப்பார். நூலறிவு மிகுதி, படித்த ஆங்கில நூல்கள் ஏராளமானவை.  புதிது, புதிதாக நூல்களை வரவழைத்து படிப்பார்கள். அனுபவ அறிவு அதைவிட அதிகம். ஆங்கிலம், இந்தி, தெலுங்கு  ஆகிய மொழிகளிலும் பயிற்சி பெற்றவர். ஆங்கிலத்தில் நீண்ட நெடிய சொற்பொழிவுகள் நிகழ்த்திய பெருமையும் இவருக்கு உண்டு.

34 வயதிலேயே சிதம்பரம் நகரமன்றத் தலைவரான இவர் காங்கிரஸ் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அப்பதவிக் காலத்தில் சுதந்திர இந்தியாவில் அரசியல் நிர்ணயசபை உறுப்பினர் பதவியும் அவருக்கு கிட்டியது. முதல் பொதுத்தேர்தலில் அதாவது 1952-ல் வன்னியர் ஓட்டு அந்நியருக்கு இல்லை என்ற முழக்கம் தமிழகத்தில் தலை தூக்கியது. காங்கிரஸ் கட்சி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற இரட்டை உறுப்பினர் தொகுதியில் பொது தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டு தோல்வியுற்றார். தோல்வியை கண்டு துவளவில்லை. பின்னர் 1957-62, 1962-67 ஆகிய காலங்களில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். இந்திராகாந்தி ஆர்.கனகசபைக்கு ஆயுள் காப்பீட்டுக்கழக இயக்குநர் பதவியை அளித்து அழகு பார்த்தார்.

தென்னாற்காடு மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவராக இருந்த இவரது முயற்சியில் தமிழகம் முழுவதும் பல கிளைகள் தோன்றின.  கூட்டுறவுதுறையில் மாநில அளவில் அவரது பங்களிப்பு பரந்து விரிவடைந்தது. அதனால் தமிழ்நாடு மாநில கூட்டுறவுச்சங்கம் அவரை தலைவராக்கியது. புகழ் பெற்று விளங்கும் மாநில கூட்டுறவு வங்கிக்கு பல ஆண்டுகள் தலைவராக இருந்தார். ஆர்.கேயின் நிர்வாக ஆளுமைத் திறமையுடனும்,  கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நடுநிலைமையுடன் செயல்பட்டதால் அனைத்து அமைப்புகளிலும் அவர் போட்டியின்றி குறிப்பாக தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கம், தமிழ்நாடு கூட்டுறவு பயிற்சி கல்லூரி ஆகியவற்றின் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் புதுதில்லியில் அமைந்த தேசிய கூட்டுறவுச் சங்கம் அவரை துணைத் தலைவராக தேர்வு செய்தது.  இதனால் இந்தியா முழுவதும் கூட்டுறவு பயன்கள் கிடைக்க வாய்ப்புகளை ஏற்படுத்தியது.  அகில இந்திய மாநிலக் கூட்டுறவு வங்கிகள் சம்மேளனத் தலைவர் பதவியையும் அளித்து மகிழ்ந்தது கூட்டுறவுத்துறை.  கூட்டுறவுத் தந்தை என நாடு முழுவதும் அறியப்பட்ட சான்றோராக விளங்கினார் ஆர்.கே. 1983-ல் மறைந்த இவரது மனைவி பெயர் குணவதி அம்மையார். இருமகன்கள், ஒரு மகள் உள்ளனர்.  இச்சிறப்பு வாய்ந்த ஆர்.கனகசபை பிள்ளையின் நூற்றாண்டு விழா சிதம்பரத்தில் அக்.27-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.