சிதம்பரம் நடராஜர் கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா நவ.3-ல் தொடக்கம்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மேலக்கோபுர வாயில் அருகே உள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா உடனுறை ஸ்ரீமுத்துக்குமகப் பெருமான் கோயிலில் கந்த சஶ்டி சூரசம்ஹார விழா நவம்பர் 3-ம் தேதி தொடங்கி 9-ம்


சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மேலக்கோபுர வாயில் அருகே உள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா உடனுறை ஸ்ரீமுத்துக்குமகப் பெருமான் கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நவம்பர் 3-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தினந்தோறும் முருகன் பெருமைகள் குறித்து ஆன்மீக சொற்பொழிவுகள், சொல்லரங்கம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தொடக்கநாளான்று மெளன சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறார். சிவநெறிச்சுடர் தி.பொன்னம்பலம், செல்வராஜ், அ.திருஞானசம்பந்தம், மு.கல்யாணராமன், பி.செல்வம், நா.புகழேந்தி ஆகியோரின் சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
நவ.8-ம் தேதி சூரசம்ஹா உற்சவமும், வெள்ளி மயில் வாகனத்தில் ஸ்ரீகுமரப்பெருமாள் தில்லைவாழ் அந்தணர்கள் மற்றும் செங்குநத் நவவீரர் புடைசூழ வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நவ.9-ம் தேதி நடராஜர் கோயிலில் உள்ள தேவசபை எனும் பேரம்பலத்தில் வேடமங்கை, வேழமங்கை, வேலவர் திருக்கல்யாண மஹோற்சவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை செங்குந்த மரபினர் மற்றும் கோயில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...