தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரம் பல்கலை மாணவியிடம் செயின் பறிப்பு

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மதுராந்தகநல்லூரைச் சேர்ந்தவர் பழனி. குஜராத்தில் கப்பல் படை அதிகாரியாக பணியாற்றும் இவரது மகள் பராசக்தி (21). இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில்

News image
Updated On :30 அக்டோபர் 2013, 10:30 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே மொபெட்டில் சென்ற பல்கலை. மாணவியை வழிமறித்து மர்மநபர்கள் ஒன்றரை பவுன் செயினை பறித்துச் சென்றனர்.

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மதுராந்தகநல்லூரைச் சேர்ந்தவர் பழனி. குஜராத்தில் கப்பல் படை அதிகாரியாக பணியாற்றும் இவரது மகள் பராசக்தி (21). இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் விடுதியில் தங்கி பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை மதுராந்தகநல்லூரில் உள்ள பாட்டி வீட்டிற்கு மொபெட்டில் சென்றுள்ளார். அப்போது கீழநத்தம் எனுமிடத்தில் 2 மர்மநபர்கள் வழிமறித்து கழுத்திலிருந்த ஒன்றரை பவுன் செயினை மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தலைமறைவானார்கள். இதுகுறித்து புகாரின் பேரில் சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.