தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காட்டுமன்னார்கோயில் அகதிகள் முகாமில் தனி துணை ஆட்சியர் ஆய்வு!

காட்டுமன்னார்கோயில் அருகே குப்பங்குழியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இம்முகாமில் 75 குடும்பங்களைச் சேர்ந்த 241 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அகதிகள் தனி துணை

News image
Updated On :30 அக்டோபர் 2013, 1:45 pm

ஜி.சுந்தரராஜன்

காட்டுமன்னார்கோயில் அகதிகள் முகாமில் சென்னை அகதிகள் மறுவாழ்வு தனி துணை ஆட்சியர் நோவலின் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

காட்டுமன்னார்கோயில் அருகே குப்பங்குழியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இம்முகாமில் 75 குடும்பங்களைச் சேர்ந்த 241 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அகதிகள் தனி துணை ஆட்சியர் நோவலின் முகாமிற்கு புதன்கிழமை சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர் வீடு, வீடாக சென்று இருப்பிடம் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மின்சார வசதி சரியாக இல்லை என்றும், கழிவுநீர் வடிகால் இல்லை என்றும் தெரிவித்தனர். உடனடியாக செய்து தரும்படி அதிகாரிகளுக்கு இணை இயக்குநர் உத்தரவிட்டார். ஆய்வின் போது நேர்முக உதவியாளர் அசோக்குமார், கடலூர் இலங்கை அகதிகள் முகாம் தனி வட்டாட்சியர் அன்புச்செல்வி, வட்டாட்சியர் வெங்கடாஜலம், முகாம் தலைவர் சுமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.