லாரி டிரைவர் மர்ம சாவு
சிதம்பரம் அருகே உள்ள தெற்குசாலியான்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (33). லாரி டிரைவரான இவர் செவ்வாய்க்கிழமை வேலைக்கு செல்வதாக மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர்


சிதம்பரம் அருகே விபத்தில் அடிபட்டு லாரி டிரைவர் ஒருவர் இறந்தார். மகன் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது தந்தை அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சிதம்பரம் அருகே உள்ள தெற்குசாலியான்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (33). லாரி டிரைவரான இவர் செவ்வாய்க்கிழமை வேலைக்கு செல்வதாக மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் ஜெயப்பிரகாஷ் வல்லம்படுகை காமராஜர் காலனி அருகே சாலையோரம் விபத்தில் அடிபட்டு கிடப்பதாக அவரது வீட்டிற்கு தகவல் வந்தது. தகவல் அறிந்த தந்தை ஏழுமலை மற்றும் உறவினர்கள் சென்று ஜெயப்பிரகாஷை பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். தனது மகன் விபத்தில் சாகவில்லை. சாவில் மர்மம் உள்ளதாக தந்தை ஏழுமலை அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறி்த்து அண்ணாமலைநகர் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...