சிதம்பரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
60 வயதை கடந்த விவசாயிகலுக்கு மாதம் ரூ.3ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பயிர் காப்பீட்டுத் தொகையை தாமதமின்றி உடனே வழங்க வேண்டும், விவசாய துறைக்கு தனிபட்ஜெட் அறிவிக்க வேண்டும்


சிதம்பரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் உதவிஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
60 வயதை கடந்த விவசாயிகலுக்கு மாதம் ரூ.3ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பயிர் காப்பீட்டுத் தொகையை தாமதமின்றி உடனே வழங்க வேண்டும், விவசாய துறைக்கு தனிபட்ஜெட் அறிவிக்க வேண்டும், கான்சாகிப் வாய்க்காலில் நகரின் கழிவுநீர் கலப்பதை தடுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.வேல்முருகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் எம்.அன்பழகன், ஏ.இளையபெருமாள், பி.இளையபெருமாள், டி.ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியுசி மாவட்ட துணைத் தவைவர் டி.மணிவாசகம், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.எம்.சேகர், மாவட்டத் தலைவர் எஸ்.ரங்கசாமி, கவுரவத் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் விளக்கவுரையாற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...