ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ஆண் சடலம் மீட்பு

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் கிடந்த ஆண் சடலத்தை ரயில்வே போலீஸார் திங்கள்கிழமை இரவு மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News image
Updated On :3 செப்டம்பர் 2013, 4:01 am

முத்துகுமார்

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் கிடந்த ஆண் சடலத்தை ரயில்வே போலீஸார் திங்கள்கிழமை இரவு மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நடைமேடையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது திங்கள்கிழமை இரவு தெரியவந்தது. சடலமாக கிடந்தவர் காவி வேட்டியும், சட்டையும் அணிந்திருநதார். சட்டையில் நாகர்கோவில்-திருநெல்வேலி ரயில் பயணச்சீட்டும், சில மாத்திரைகளும் இருந்ததாம். ரத்த வாந்தி எடுத்த நிலையில் அவர் கிடந்ததால், உடல் நலக்குறைவு காரணமாக இறந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

அவர் அருகே கிடந்த பையில் ரேஷன் அட்டை நகல் இருந்ததாம். அதில் சங்கர், மனோன்மணீயம் சுந்தரனார் தெரு, அகஸ்தீசுவரம், கன்னியாகுமரி மாவட்டம் என குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

இருப்பினும் அவர் யார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து திருநெல்வேலி ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.