யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மேட்டூர் புதிய மின் உற்பத்தி நிலையத்தில் முன்னோட்டப் பணி துவக்கம்

மேட்டூர் புதிய மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தியைத் துவக்குவதற்கான முன்னோட்டப் பணிகள் செவ்வாய்க்கிழமை காலை துவங்கின.

News image
Updated On :3 செப்டம்பர் 2013, 5:56 am

தங்கராஜா

மேட்டூர் புதிய மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தியைத் துவக்குவதற்கான முன்னோட்டப் பணிகள் செவ்வாய்க்கிழமை காலை துவங்கின.

சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே தலா 210 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புதிதாக 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய புதிய மின் உற்பத்தி நிலையம் துவக்கும் பணி ரூ. 3500 கோடி செலவில் கடந்த ஆண்டு துவங்கியது.

மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி முடிவடைந்த சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றது. இதையடுத்து மின் உற்பத்தி நிலையத்தின்  முன்னோட்டப் பணி இன்று காலை 6 மணிக்கு துவங்கியது.

இதையடுத்து இன்று மாலை இந்த புதிய மின் உற்பத்தி நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாக வாய்ப்பிருப்பதாக அனல்மின் நிலையபெறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் காற்றாலை மின்சாரம் குறைந்து விட்ட நிலையில், சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கடந்த இரண்டு வாரங்கள் 4 மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது.

இந்த நிலையில், இந்த புதிய மின் உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது தமிழக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.