ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு மொபட்டில் சென்றுகொண்டிருந்தவர் மீது அரசுப்பேருந்து மோதியதால் மொபட்டில் சென்ற வாலிபர் அதே இடத்தில் இறந்தார். இது குறித்து ஆரணி நகர போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த வேலு(30) என்பவர் மொபட்டில் களம்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே ஆரணியை நோக்கி வந்துகொண்டிருந்த அரசுப்பேருந்து மோதியது. இதில் வேலு அதே இடத்தில் இறந்தார். தகவலறிநத் ஆரணி நகர போலீஸார் சம்பவ இடத்திற்கு பிரேதத்தை கைப்பற்றி ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் வேலுவிற்கு மனைவி கீதாவும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் கூலித்தொழிலாளி ஆவார்.
மேலும் போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.