வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிதம்பரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு இடம் தேர்வு: உயர்நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டார்

சிதம்பரம் அருகே சி.முட்லூர் புறவழிச்சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க 6.41 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.தமிழ்வாணன் இன்று

News image
Updated On :7 செப்டம்பர் 2013, 8:55 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே சி.முட்லூர் புறவழிச்சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க 6.41 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.தமிழ்வாணன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவருடன் மாவட்ட நீதிபதி குமரகுரு, சிதம்பரம் நீதிமன்ற நீதிபதிகள் அகிலா ஷாலினி, இந்திராணி, உதவிஆட்சியர் எம்.அரவிந்த், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பிரேம்சந்தர், உதவி செயற்பொறியாளர் வைத்தியநாதன், வட்டாட்சியர் எம்.விஜயா, டிஎஸ்பி ஆர்.ராஜாராம் உள்ளிட்டோர் உடன் சென்றனர். முன்னதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியை வழக்குரைஞர்கள் ஏ.கே.நடராஜன், ஏ.சம்பந்தம், சி.செந்தில், கே.பாலசுப்பிரமணியன் மற்றும் வழக்குரைஞர்கள் வரவேற்றனர்.

அப்போது உயர்நீதிமன்ற நீதிபதியிடம், நீதிமன்ற வளாகத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் சிதம்பரத்திலிருந்து நீண்ட தூரத்தில் உள்ளதால், நகரப் பகுதியிலேயே நகராட்சிக்கு சொந்தமான அண்ணாகலையரங்கம் உழவர் சந்தை பகுதியில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் நீதிபதி பி.தமிழ்வாணன் அண்ணா கலையரங்கம் பகுதியை பார்வையிட்டு வழக்குரைஞர்களிடம் இந்த இடத்தில் உழவர்சந்தை உள்ளது. மக்கள் பயன்பாட்டிற்காக உள்ள இடம். எதிர்காலத்தை கருத்தில் தொலைநோக்கு பார்வையில் பார்வையில் சி.முட்லூர் பகுதியில் கூடுதல் இடமாக இருப்பதால் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்குரைஞர்கள் உணர்வுகளை கருதி மாவட்ட ஆட்சியரிடம் இந்த இடத்தில் அமைக்க சாத்தியமா? என தெரிவிக்கிறேன் என தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்குரைஞர்கள் வேண்டுகோளை அடுத்து சிதம்பரம் நகரின் மையப்பகுதியில் உள்ள தற்போதைய நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்ற கட்டடம், நீதிமன்ற குடியிருப்பு, அருகாமையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடம் ஆகியவற்றை உயர்நீதிமன்ற நீதிபதி பி.தமிழ்வாணன் பார்வையிட்டார். இந்த கட்டடங்கள் இடித்துவீட்டு மீண்டும் கட்டுவது சாத்தியமில்லை என தெரிவித்தார். பின்னர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் விடுதியில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.