திருவதிகை ஸ்ரீவிரதானேஸ்வரர் கோயிலில் கொள்ளை முயற்சி
பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீ வீரதானேஸ்வரர் கோயிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.


பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீ வீரதானேஸ்வரர் கோயிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
பழமையும், வரலாற்றுச் சிறுப்பும் மிக்க ஸ்ரீ வீரதானேஸ்வரர் கோயிலில் மதில் சுவர் வழியாக கயிறு போட்டு ஏறி, கருவறை கதவை உடைக்க முயற்சி நடந்துள்ளது. கருவறைக்குச் செல்லும் கதவை மர்ம நபர்கள் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் உடைக்க முயன்ற போது, கோயிலுக்குள் இருந்த அலாரம் அடித்ததால் திருடர்கள் தப்பிச் சென்றனர்.
இது குறித்து அளிக்கப்பட்டுள் புகாரினை அடுத்து, டிஎஸ்பி கிருஷ்ணசாமி, ஆய்வாளர் சிவசுப்பு ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, ராஜகோபுரத்தின் உள் பகுதியில் இருந்த உண்டியலை உடைத்த கொள்ளையர்கள், அதில் இருந்த பணம் உள்ளிட்ட காணிக்கை பொருட்களை கொள்யைடித்துச் சென்றனர்.
கோயிலில் போதுமான பணியாளர்களும், காவலர்களும் இல்லாததால் தொடர்ந்து அங்கு திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. அலாரம் அடித்து கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டதால், விலை உயர்ந்த சுவாமி சிலைகள், பூஜை பொருட்கள் தப்பித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...