உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் : முந்திரி வியாபாரி கைது
போக்குவரத்துத் துறை உதவி ஆய்வாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த முந்திரி வியாபாரியை பண்ருட்டி போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.


போக்குவரத்துத் துறை உதவி ஆய்வாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த முந்திரி வியாபாரியை பண்ருட்டி போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பண்ருட்டி காவல் நிலையம் போக்குவரத்துத் துறை பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஏ. அருண். கடந்த 8ம் தேதி பணியில் இருந்த போது குடி போதையில் வாகனம் ஓட்டி வந்த வடக்கு சாத்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முந்திரி வியாபாரி கந்தவேல் (40) என்பவரை பிடித்து வழக்குப் பதிவு செய்தார் அருண்.
இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் நான்கு முனை சந்திப்பில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் சண்முகம் என்பவரிடம் வந்து அருண் எஸ்ஐ பற்றி விசாரித்து கொலை மிரட்டல் விடுத்ததுடன், காவல்நிலைய வாயிலுக்கு வந்து அருணை எச்சரித்து சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அருண் கொடுத்த புகாரின் பேரில், கந்தவேலை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...