வடவாற்றில் மிதந்து வந்த பெண் சடலம் மீட்பு!
காட்டுமன்னார்கோயில் அருகே வீராணம்ஏரிக்கு நீர் வரும் வடவாற்றில் வெள்ளிக்கிழமை காலை சுமார் 40 வயது முதல் 50 வயதுடைய பெண்மணியின் சடலம் மிதந்து வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள்


காட்டுமன்னார்கோயில் அருகே வடவாற்றில் இன்று காலை மிதந்து வந்த சுமார் 40 வயது முதல் 50 வயதுடைய பெண் சடலத்தை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
காட்டுமன்னார்கோயில் அருகே வீராணம்ஏரிக்கு நீர் வரும் வடவாற்றில் வெள்ளிக்கிழமை காலை சுமார் 40 வயது முதல் 50 வயதுடைய பெண்மணியின் சடலம் மிதந்து வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காட்டுமன்னார்கோயில் தீயணைப்புத்துறையினர் ருத்ரசோலை எனுமிடத்தில் பெண்ணின் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பச்சை கலர் ஜாக்கெட் மட்டும் அப்பெண் அணிந்துள்ளார். இவர் யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. இவர் ஆற்றில் குளிக்கும் போது தவறி விழுந்து இறந்தாரா? ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என காட்டுமன்னார்கோயில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...