வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தேசிய நெடுஞ்சாலையில் மின்கம்பம் விழுந்து 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு

சிதம்பரம் அருகே சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை மாலை சாலையோரம் உள்ள உயர்மின்அழுத்த கம்பி செல்லும் மின்கம்பத்தின் மீது லாரி ஒன்று மோதியது. இதில் மின்கம்பியுடன்

News image
Updated On :14 செப்டம்பர் 2013, 2:51 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று மோதியதில் உயர்மின்அழுத்த கம்பியுடன் உள்ள மின்கம்பம் முறிந்து விழுந்தது. இதனால் சிதம்பரம்-சீர்காழி சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிதம்பரம் அருகே சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை மாலை சாலையோரம் உள்ள உயர்மின்அழுத்த கம்பி செல்லும் மின்கம்பத்தின் மீது லாரி ஒன்று மோதியது. இதில் மின்கம்பியுடன் மின்கம்பம் முறிந்து கீழே விழுந்தது. தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீஸார் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து மின்சப்ளையை துண்டித்து மின்கம்பியை அகற்றிய பிறகு போக்குவரத்து இயக்கப்பட்டது. இதனால் சிதம்பரம்-சீர்காழி சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின்கம்பத்தின் மீது மோதிவிட்டு சென்ற லாரியை கொள்ளிடம் போலீஸார் பிடித்தனர். தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு உடனடியாக புதிய மின்கம்பத்தை பொருத்தி மின்சப்ளையை சீரமைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.