சேக்கிழார் அறக்கட்டளை துணைத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு பிள்ளை தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் க.சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை நிறுவனரின் புதல்விகள் சென்னை சுந்தரகுமாரி ராதாகிருஷ்ணன், யுஎஸ்ஏ டாக்டர் கிருஷ்ணகாந்தி, புதல்வர் வி.எஸ்.மணி ஆகியோர் மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினர். பரிசு பெற்ற மாணவர்கள்: எஸ்.சண்முகப்பிரியா (ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி), கே.ஹாலிக்ரகுமான் (ஆறுமுகநாவலர் மேல்நிலைப்பள்ளி), என்.நிவேதா (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி), என்.சாகித்தியா (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி).