வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிதம்பரம் ஸ்ரீரத்தினபுரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்

ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆல்வேம்பு மரத்தடியில் அமைந்துள்ள ஸ்ரீரத்தினபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பூஜை

News image
Updated On :16 செப்டம்பர் 2013, 1:08 pm

G.Sundararaj

சிதம்பரம் மந்தகரையில் அமைந்துள்ள ஸ்ரீரத்தின விநாயகர், ஸ்ரீரத்தினபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.

ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆல்வேம்பு மரத்தடியில் அமைந்துள்ள ஸ்ரீரத்தினபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பூஜை தொடங்கப்பட்டு நடைபெற்றது. திங்கள்கிழமை கோபூஜை நடைபெற்ற பின்னர் யாகசாலையிலிருந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு கோயில் விமானத்தைச் சென்றடைந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள் காலை 7 மணிக்கு கலசநீரை கும்பத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், எஸ்.ஆர்.ராமநாதன், எஸ்.ஆர்.திருநாவுக்கரசு, பரந்தாமன், சுவாமிநாதன், தண்டபாணி, செந்தில் உள்ளிட்டோர் செய்திருந்தனர். கருடாழ்வார் நற்பணி மன்றம் சார்பில் மார்க்கெட் நாகராஜ் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.