தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
விலங்கபாடி பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள வேப்பமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.இறந்த கிடந்த நபர் சுமார் 35 வயது மதிப்பு உடையவராகவும் அவர் குறித்த


திண்டிவனம் அடுத்த விலங்கம்பாடியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தவரின் சடலத்தை மயிலம் போலீஸார் கைப்பற்றினர்.
விலங்கபாடி பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள வேப்பமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.இறந்த கிடந்த நபர் சுமார் 35 வயது மதிப்பு உடையவராகவும் அவர் குறித்த பெயர் விவரம் தெரியாத நிலையில் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸார் இறந்த நபரின் உடலை கைப்பற்றி திண்டிவனம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணையை துவக்கி உள்ள போலீஸார் இது குறித்து வழக்கு பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...