ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

டி.வி. வாங்கியதில் தகராறு: பேட்டையில் தொழிலாளி அடித்துக்கொலை

திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்த மைதீன்பிச்சை மகன் முகம்மதுஜான் (40). கூலித்தொழிலாளி. இவர், தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஹனீபாவிடம் (60) டி.வி.யை விலைக்கு வாங்கினாராம். பின்னர் அந்த டி.

News image
Updated On :22 செப்டம்பர் 2013, 11:36 am

முத்துகுமார்

திருநெல்வேலி மாவட்டம், பேட்டையில் டி.வி. வாங்கியது தொடர்பான தகராறில் தாக்கப்பட்ட கூலித்தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்த மைதீன்பிச்சை மகன் முகம்மதுஜான் (40). கூலித்தொழிலாளி. இவர், தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஹனீபாவிடம் (60) டி.வி.யை விலைக்கு வாங்கினாராம். பின்னர் அந்த டி.வி. சரியில்லையென முகம்மதுஜான் திருப்பிக் கொடுத்தாராம். ஆனால், அதற்கான பணத்தை ஹனீபா கொடுக்காததால் இருவரிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாம்.சனிக்கிழமை இரவும் இருவரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது சைக்கிளுக்கு ஏர் அடிக்கும் பம்பால் முகம்மதுஜான் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த முகம்மது ஜானை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

இதுதொடர்பாக ஹனீபா, அவரது மகன் மைதீன் ஷேக் (36), மனைவி ஹம்சுமெஹர்நிஷா ஆகியோர் மீது திருநெல்வேலி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரி்த்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.