தமிழக மீனவர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு : நாராயணசாமி

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்கும். தேர்தலில் 3வது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்.
தமிழக மீனவர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு : நாராயணசாமி
Updated on
1 min read

தமிழக மீனவர் பிரச்னையில் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசும், மத்திய, மாநில அரசுகளும் தயாராக இருப்பதால், விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்துள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்கும். தேர்தலில் 3வது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்.

இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள், புதுகை மீனவர்கள் கூட்டாக பேச்சுவார்த்தை நடத்த, மத்திய, மாநில அரசுகள் தயாராக இருப்பதால், விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நிரந்தர தீர்வு காண வழி வகுப்போம் என்று உறுதி அளித்தார்.

மேலும், கோவையில்  யுபிஎஸ்சிக்கான முதல்நிலை தேர்வு மையம் அமைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதேப்போல, எஸ்எஸ்சி எனப்படும் மத்திய பணியாளர்  தேர்வு ஆணையம் மூலம் அடுத்த 2 ஆண்டுகளில் 2 லட்சம் பேரை பணி நியமனம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com