தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பதற்றம் : போலீஸார் குவிப்பு

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு பண்ருட்டி வட்டம் விசூர் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்ற பாலிடெக்னிக் மாணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :24 செப்டம்பர் 2013, 7:32 am

சீனிவாசன்

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு பண்ருட்டி வட்டம் விசூர் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்ற பாலிடெக்னிக் மாணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

உளுந்தூர் பேட்டையில் இவர் படித்து வந்த பாலிடெக்னிக் கல்லூரியின் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த இளையராஜா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது முத்தாண்டிகுப்பம் காவல்நிலையத்தில் 174 பிரிவின் கீழ் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரேத பரிசோதன முடிந்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பள்ளி நிர்வாகத்தின் மீதும், ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி பிரேதத்தை வாங்காமல் உள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலர் சிந்தனை செல்வன், பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு, வட்டாட்சியர் குமுதம், போலிஸ் அதிகாரியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பேச்சுவார்த்தையின் போது வாக்குவாதம் ஏற்பட்டு, அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தாசில்தார், டிஎஸ்பியை பார்த்துவிட்டு அதன்பிறகு எந்த ஒரு முடிவையும் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்ட மாணவரின் பெற்றோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு மற்றும் இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினரும் ஆதரவாக உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.