ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

13-ம் நூற்றாண்டு சுடுமண் உறை கேணி கண்டுபிடிப்பு: தொல்லியல் ஆய்வாளர் ஆய்வு

சிதம்பரம் ஓமக்குளம் இந்த ஆலய பாதுகாப்புக்குழு சார்பில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தூர்வாரும்போது திங்கள்கிழமை பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த காலத்தில் 13-ம் நூற்றாண்டில்

News image
Updated On :25 செப்டம்பர் 2013, 12:20 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஓமக்குளத்தில் தூர்வாரும் போது கண்டுபிடிக்கப்பட்ட 13-ம் நூற்றாண்டு சுடுமண் உறை கேணி மற்றும் செங்கல் கேணிகள் புதன்கிழமை தொல்லியல் ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டார்.

சிதம்பரம் ஓமக்குளம் இந்த ஆலய பாதுகாப்புக்குழு சார்பில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தூர்வாரும்போது திங்கள்கிழமை பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த காலத்தில் 13-ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட 13 அடுக்குகள் கொண்ட சுடுமண் உறை கேணி 2-ம், 17-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட 20 அடிக்கு மேல் விட்டம் கொண்ட செங்கல் கேணிகள்- 4 ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இதனை சென்னை தொல்பொருள் ஆய்வுத்துறையை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் முனைவர் யத்தீஷ்குமார் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிற்கால சோழர்கள் காலத்தில் இதுபோன்ற சுடுமண் உறை கேணியை மக்கள் தூய குடிநீருக்காக அமைத்து பயன்படுத்தியுள்ளனர். இதுபோன்று சுடுமண் உறை கேணிகள் மகாபலிபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பரவலாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என முனைவர் யத்தீஷ்குமார் தெரிவித்தார். தொல்லியல் ஆய்வாளருடன் இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன், நிர்வாகிகள் சந்திரசேகரன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.