யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலம் மாநகராட்சி மன்றத்தில் திமுக-அதிமுக உறுப்பினர்கள் கைகலப்பு: அடிதடி ரகளையால் பரபரப்பு

சேலம் மாநகராட்சி மாமன்றத்தில் வழக்கமான கூட்டம் முற்பகல் 11 மணிக்குத் தொடங்கியது. மேயர் கலந்து கொண்ட இந்தக் கூட்டம், ஆணையர் அசோகன் முன்னிலையில் தொடங்கியது

News image
Updated On :26 செப்டம்பர் 2013, 6:55 am

தங்கராஜா

சேலம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

சேலம் மாநகராட்சி மாமன்றத்தில் வழக்கமான கூட்டம் முற்பகல் 11 மணிக்குத் தொடங்கியது. மேயர் கலந்து கொண்ட இந்தக் கூட்டம், ஆணையர் அசோகன் முன்னிலையில் தொடங்கியது

அப்போது, அவசரத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. திமுக கவுன்சிலர் புவனேஸ்வரி முரளி பேசும்போது, நகரில் ஓடைகள் 2 மாதம் முன்பே தூர் வாரப்பட வேண்டும் என்று கூறினோம். இப்போது மழை பெய்து, ஓடைகள் அடைக்கப்பட்டு, ஊருக்குள் சாக்கடைத் தண்ணீர் புகுந்து கொண்டு விட்டது என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேயர் பதில் அளித்தார். அப்போது, இந்த ஓடைகள் ஆக்கிரமிப்பு திமுக காலத்தில் செய்யப்பட்டது என்றும் அதனால் இப்போது அவற்றை அப்புறப்படுத்துவதில் சிக்கல் உள்ளது என்றும் கூறினார்.

இதற்கு திமுக கவுன்சிலர்கள் எழுந்து நின்று ஒரே குரலில் பேசினர். அப்போது, திமுக கவுன்சிலர் தெய்வலிங்கத்தை அதிமுக கவுன்சிலர் மாரியப்பன் தாக்கினார்.

மேலும் அதிமுகவினர் சிலர் சூழ்ந்து நின்று தாக்கத் தொடங்கினர். அதிமுக திமுக பெண் கவுன்சிலர்கள் ஒருமையில் திட்டிக் கொண்டு கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் கூட்டம் பாதியில் முடிந்தது. இந்த ரகளை மற்றும் அடிதடியால் மாநகராட்சி மன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.