ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ஸ்ரீநடராஜர் கோயில் உண்டியலில் ரூ.10லட்சத்து 17 ஆயிரத்து 186 காணிக்கை

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வியாழக்கிழமை 23வது முறையாக உண்டியல் திறந்து எண்ணப்பட்டத்தில் 10லட்சத்து 17 ஆயிரத்து 186 ரூபாய் உண்டியல் காணிக்கை மூலம் கிடைத்துள்ளது. இதுவரை 23 முறை

News image
Updated On :26 செப்டம்பர் 2013, 10:29 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வியாழக்கிழமை 23வது முறையாக உண்டியல் திறந்து எண்ணப்பட்டத்தில் 10லட்சத்து 17 ஆயிரத்து 186 ரூபாய் உண்டியல் காணிக்கை மூலம் கிடைத்துள்ளது. இதுவரை 23 முறை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் மொத்தம் 1 கோடியே 38 லட்சத்து 41 ஆயிரத்து 99 ரூபாய் உண்டியல் காணிக்கை மூலம் வருவாய் கிடைத்துள்ளது.

ஸ்ரீநடராஜர் கோயிலை உயர்நீதிமன்ற ஆணைப்படி இந்து அறநிலையத்துறை கடந்த 2009-ம் ஆண்டு பிப்.2-ம் தேதி கையகப்படுத்தி புதிய நிர்வாக அலுவலரை நியமித்தது. பின்னர் பிப்ரவரி 5-ம் தேதி சித்சபை எதிரே முதன்முதலாக கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் படிபடியாக கோயிலில் பல்வேறு இடங்களில் மொத்தம் 9 உண்டியல்கள் வைக்கப்பட்டது.தற்போது வியாழக்கிழமை (செப்.26) இந்து அறநிலையத்துறை உதவிஆணையர் சி.ஜோதி, செயல்அலுவலர் க.முருகன், ஆய்வாளர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலையில் 23-வது முறையாக உண்டியல் எண்ணப்பட்டது. பாங்க் ஆஃப் இந்தியா ஊழியர்கள் மற்றும் அறநிலையத்துறை ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.  9 உண்டியல்களை திறந்து எண்ணப்பட்டதில் 10 லட்சத்து 17 ஆயிரத்து 186 ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்தது.

மேலும் உண்டியலில் 11.500 கிராம் தங்கம் மற்றும் 60 கிராம் வெள்ளி பொருள்களும், நேபாள் ரூபாய்-50, இலங்கை ரூபாய்-230, அமெரிக்க டாலர்-1, மலேசியா ரிங்கட்-272, இங்கிலாந்து பவுண்டு-10, சிங்கப்பூர் டாலர்-2  ஆகியவை இருந்தது.  உண்டியல் வைக்கப்பட்டு 4 வருடம் 3 மாதங்களில் இதுவரை 23 முறை உண்டியல் எண்ணியதில் மொத்தம் ரூ.1 கோடியே, 38லட்சத்து 41 ஆயிரத்து 99 ரூபாய் கிடைத்துள்ளது என செயல்அலுவலர் க.முருகன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.