தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

விசாரணைக் கைதி மரணம் : பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணைக் கைதி மரணம் அடைந்த சம்பவத்தில், முருகன் உடலை பெறுவது குறித்தும், அவரது குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு மற்றும் நிவாரண உதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, சம்பவத்துக்குக் காரணமான பண்ருட்டி போலீஸார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :27 செப்டம்பர் 2013, 9:47 am

சீனிவாசன்

பண்ருட்டி வட்டாட்சியர்  அலுவலகத்தில் விசாரணைக் கைதி மரணம் அடைந்த சம்பவத்தில், முருகன் உடலை பெறுவது குறித்தும், அவரது குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு மற்றும் நிவாரண உதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, சம்பவத்துக்குக் காரணமான பண்ருட்டி போலீஸார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், இன்று காலை நடந்த பேச்சுவார்த்தையின் போது அடிதடி ஏற்பட்டதை அடுத்து, கூட்டத்துக்கு அனைத்துக் கட்சியைச் சேர்ந்த ஒவ்வொரு முக்கிய நபரை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் பண்ருட்டி ஆய்வாளரை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு பரிந்துரை செய்வது, குடும்பத்துக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கும், வேலை வாய்ப்பு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து உறவினர்கள் உடலை பெற்றுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.