குடி போதையில் குழந்தையைப் பறிக்க முயன்ற கணவரின் தலையை வெட்டி, அவரது இரண்டாவது மனைவி கொலை செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் காவல் சரகம் காட்டாம்பூரைச் சேர்ந்தவர் பாரிமன்னன் (30). இவர் மீது 30க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்கு உள்ளது. இவர் தென்மாபட்டு பகுதியைச் சேர்ந்த பிரவீனா (21) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. பிரவீனா தென்மாபட்டு கிராமத்தில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
அவ்வப்போது குடி போதையில் பிரவினாவுடன் பாரிமன்னன் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு குடிபோதையில் வந்து தகராறில் ஈடுபட்டு பிரவீனாவிடமிருந்து குழந்தையைப் பறிக்க முயன்றாராம். இதில் ஆத்திரமடைந்த பிரவீனா அரவாளால் வெட்டியதில் பாரிமன்னனின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
திருப்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
இரண்டாம் தர குடிமக்களா நாங்கள்? - ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்!

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

