திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சிவகங்கை தமுமுக நகரத் தலைவரை கொல்ல முயற்சி

சிவகங்கை தமுமுக நகரத் தலைவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி கும்பல் ஒன்று கொலை செய்ய முயன்றுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On :28 செப்டம்பர் 2013, 6:57 am

சிவகங்கை தமுமுக நகரத் தலைவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி கும்பல் ஒன்று கொலை செய்ய முயன்றுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை நகர் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்து வருபவர் அப்துல்மாலிக் (40). வெள்ளிக்கிழமை இரவு நேரு பஜார் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது இவரை வழி மறித்து ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கடந்த 17.92013 அன்று சிவகங்கை திருவள்ளுவர் தெருவில் உள்ள பள்ளிவாசல் கூரை கொட்டகையை யாரோ தீ வைத்து எரித்தனர். இச்செயலில் ஈடுபட்ட எதிரியை கைது செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழுகை போராட்டம் நடத்திட கழகத்தின் சார்பில் முடிவு செய்திருந்தனர்.

இதற்கிடையே வியாழக்கிழமை சிவகங்கை கோட்டாட்சியர் முன்னிலையில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. சில தினங்களுக்கு முன் தான் தமுமுக நகர் நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் அப்துல்மாலிக் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.