புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் நகை கொள்ளை

ஈரோடு அருகே கொல்லம்பாளையம் காந்திஜி வீதியைச் சேர்ந்தவர் சின்னம்மாள் (65). இவரது கணவர் துரைசாமி இறந்துவிட்டதால், சின்னம்மாள் மகள் வீட்டில் தங்கியிருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு மளிகைக்

News image
Updated On :30 செப்டம்பர் 2013, 8:16 am

ஜபலின் ஜான்

ஈரோடு அருகே கொல்லம்பாளையம் காந்திஜி வீதியைச் சேர்ந்தவர் சின்னம்மாள் (65). இவரது கணவர் துரைசாமி இறந்துவிட்டதால், சின்னம்மாள் மகள் வீட்டில் தங்கியிருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு மளிகைக் கடைக்குச் சென்றாராம். அப்போது, 3 பேர் தங்களை போலீஸார் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார்கள். அவர்கள், சின்னம்மாளிடம் நகையை ஏன் இப்படி போட்டுச் செல்கிறீர்கள். கழற்றி பத்திரமாக கையில் வைத்துக் கொண்டு செல்லுங்கள் என்று கூறி ஒரு துண்டில் சுற்றிக் கொடுத்தார்களாம். சின்னம்மாள் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அதில் செங்க்ல்தான் இருந்ததாம். இது குறித்து அவர் உடனே போலீஸில் புகார் அளித்தார். இது குறித்து ஈரோடு தாலுகா போலீஸ் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.