விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஸ்ரீவில்லிபுத்தூர் : அவசர விடுப்பில் சென்ற ஆயுள் தண்டனைக் கைதி தலைமறைவு

அவசர விடுப்பில் வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயுள் தண்டனைக் கைதி குறிப்பிட்ட நாளில் சிறைக்கு வராததால் சிறை அதிகாரியின் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகிறார்கள்.

Updated On :30 செப்டம்பர் 2013, 9:30 am

அவசர விடுப்பில் வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயுள் தண்டனைக் கைதி குறிப்பிட்ட நாளில் சிறைக்கு வராததால் சிறை அதிகாரியின் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், பெரியமாரியம்மன்கோயில் செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் ஜான்பீட்டர் (37). இவர் ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் உள்ளார். இவரது தாய் லட்சுமியின் உடல் நிலை சரியில்லை என்று கடந்த 24.9.13-ம் தேதி இவரது தம்பி அருள்ராஜ் கொடுத்த விண்ணப்பத்தின் பேரில், ஜான்பீட்டர் 3 நாள் அவசர கால விடுப்பில் சிறையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்துள்ளார். 28.9.13-ம் தேதி மாலை சிறைக்கு ஜான்பீட்டர் வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் வரவில்லை. இதனையடுத்து மதுரை மத்திய சிறையின் சிறை அலுவலர் (பொறுப்பு) இளவரசன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜான்பீட்டரைத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.