தஞ்சாவூர் மேல வீதியைச் சேர்ந்த மணிக்கொடி காலத்து எழுத்தாளர் வி. சுவாமிநாத ஆத்ரேயர் வியாழக்கிழமை (டிசம்பர் 19) அவரது இல்லத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 94.
1919 நவ. 19-ம் தேதி பிறந்த இவர் தனது தந்தை சிமிழி வெங்கடராம சாஸ்திரியிடம் சகல சாஸ்திரங்கள், ராமாயண பாகவதாதி இதிகாச புராணங்களைக் கற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருத வ்யாகரண சிரோமணி பயின்றார். சம்ஸ்கிருதத்தில் புலமைப் பெற்ற இவர் ஆங்கிலப் பேராசிரியர் "சில்வர் டங்க்' சீனிவாச சாஸ்திரியின் வகுப்பில் கலந்து கொண்டு அவர் கூறும் சொற்றொடர்களை சம்ஸ்கிருதத்தில் எடுத்துரைத்து, அவரது நன் மதிப்பைப் பெற்றவர்.
காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வானாகிய சுவாமிநாத ஆத்ரேயர் இசையிலும் புலமைப் பெற்றவர்.
மணிக்கொடி காலத்து எழுத்தாளரான சுவாமிநாத ஆத்ரேயர் "மாணிக்க வீணை' போன்ற படைப்புகளுக்குச் சொந்தக்காரர். அவரது படைப்புகளில் பகவத்கீதை தமிழ் மொழிபெயர்ப்பு, துளசி ராமாயணம் தமிழ் மொழியாக்கம், பக்த சாம்ராஜ்யம், நாம சாம்ராஜ்யம், ஸ்ரீராமமாதுரீ, ராமநாமம், தியாகராஜ அனுபவங்கள், ஆத்ரேய லகு லேக மாலா, ஜய ஜய ஹனுமான், சிவ லீலார்ணவம் தமிழாக்கம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
காஞ்சி மஹா பெரியவரின் அன்புக்குரிய சீடரான சுவாமிநாத ஆத்ரேயர் மஹா பெரியவரின் விருப்பப்படி "சமர்த்த ராமதாஸ் சரிதம்' என்ற நூலை எழுதியுள்ளார்.
அவர் எழுதிய தியாகராஜ அனுபவங்கள் என்ற நூலில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் உளப்பாங்கு, கீர்த்தனைகள் உருவான விதம் குறித்து மிக அழகாக வர்ணித்துள்ளார். அவரது சம்ஸ்கிருத நூல்களை பாராட்டி அவருக்கு முன்னாள் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி "ராஷ்ட்ரிய சம்ஸ்கிருத சம்ஸ்தான மூலம்' என்ற விருதை வழங்கி கெüரவித்தார்.
மேலும், இவருக்கு 1963 ஆம் ஆண்டில் காஞ்சி பெரியவர் ஆசுகவி திலகம் என்ற விருதையும், மடத்தின் "ஆஸ்தான வித்வான்' என்ற விருதையும் வழங்கினார். தவிர, இவருக்கு 2010 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் "அறக்கட்டளை ஞானச்செம்மல்' என்ற விருதையும், உலக வேத அமைப்பு "வேதஸ்ரீ' என்ற விருதையும் வழங்கிக் கெüரவித்தன. இவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
தொடர்புக்கு ஆர். சுந்தரராமன் - 90037 71433.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோலாகலமாகத் தொடங்கிய ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா - புகைப்படங்கள்

இன்றைய செய்திகள் ஜூன் 12 - நேரலை

எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்
ரோஹித் சர்மாவின் அனுபவம் எங்களுக்கு உதவியாக இருக்கும்: மோர்னே மோர்க்கல்
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



