பழனி மலைக்கோயிலில் கார்த்திகை திருநாள் கூட்டம்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு வியாழக்கிழமை இலட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு வியாழக்கிழமை இலட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரம் வியாழக்கிழமை வந்ததால் இலட்சக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலுக்கு வந்து மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கொடுமுடி காவிரி தீர்த்தம் தரித்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.
இதனால் அடிவாரத்தில் உள்ள மலைக்கோயிலுக்கு செல்லும் ரோப்கார் மற்றும் வின்ச் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். மலைக்கோயிலிலும் கட்டண தரிசன வாயில், இலவச தரிசன வாயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர். பக்தர்களுக்கு போதிய சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் குடிநீர் வசதிகள் திருக்கோயில் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் திருக்கோயில் சார்பில் 108 திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) இராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...