சேலத்தில் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் இரண்டாவது நாளாக மறியல்

சேலம் மாநகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் குடிநீர் கோரி இரண்டாவது நாளாக வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

சேலம் மாநகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் குடிநீர் கோரி இரண்டாவது நாளாக வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

 கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் சேலம் மாநகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் குடிநீர் இன்றி தவித்து வரும் மக்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாநகராட்சி 54-வது வார்டில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு 25 நாள்களுக்கும் மேல் ஆகிவிட்டதாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

 தமிழக முதல்வர் ஜெயலலிதா சேலத்துக்கு வியாழக்கிழமை வர உள்ள நிலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டது அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. இந்த நிலையில் 54-வது வார்டு பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை காலை மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். 54-வது வார்டுக்குள்பட்ட சீரங்கன் தெரு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 40 பெண்கள், காலிக் குடங்களுடன் சேலம் - திருச்சி மெயின் ரோட்டில், சஞ்சீவிராயன்பேட்டையில் மறியலில் ஈடுபட்டனர்.

 இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் சந்தோஷ்குமார் தலைமையிலான போலீஸôர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் மாநகராட்சி மண்டல அலுவலர்களும் வரவழைக்கப்பட்டனர்.

 உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com