பழனி-கொடைக்கானல் சாலை பராமரிப்புப் பணிக்காக மேலும் இருநாட்கள் வாகனங்கள் செல்ல தடை.
பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் சாலை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வெள்ளி, சனி இருநாட்கள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் சாலை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வெள்ளி, சனி இருநாட்கள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்குவது கொடைக்கானல். இதில் பழனி-கொடைக்கானல் பாதை இயற்கை எழில் காட்சிகள் நிறைந்ததாக இருப்பதால் இப்பாதை அதிக பயன்பாட்டில் உள்ளது. தற்போது தமிழக அரசு சுற்றுலாப்பயணிகள் மேம்பாட்டிற்காக பெருமாள்மலை முதல் சவரிக்காடு வரையிலான தூரத்தை சுமார் ஐந்து கோடி மதிப்பில் சீரமைக்க உத்திரவிட்டதைத் தொடர்ந்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பழனி-கொடைக்கானல் சாலையில் பல கி.மீ தூரத்துக்கு புதிய தார்சாலைப் பணிகள் நிறைவு நிலையில் குறிப்பிட்ட பெருமாள்மலை முதல் சவரிக்காடு இடையிலான குறிப்பிட்ட தூரத்திற்கு தற்போது தார்சாலை பணி நடைபெறவுள்ளது.
இப்பகுதியில் கனரக வாகனங்கள் பிரேக் பிடித்து திரும்பும்போது புதிய தார்சாலை பெயர்ந்து விடும் என்பதால் கடந்த புதன்,வியாழன் ஆகிய இருநாட்கள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் பணிகள் நிறைவு பெறாததால் இன்றும், நாளையும் (வெள்ளி, சனி) போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் வத்தலக்குண்டு வழியாக மாற்றுப்பாதையில் செல்லுமாறு உதவிக் கோட்டப் பொறியாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்கள், கிராமவாசிகள் பாதிக்காவண்ணம் அரசுப் பேருந்துகள், மோட்டார் சைக்கிள்கள் செல்ல தடையில்லை, மேலும் இத்தடையானது காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...