கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லையில் கரியமாணிக்கப் பெருமாள் கோயில் தேரோட்டம்

திருநெல்வேலி நகரத்தில் உள்ள கரியமாணிக்கப் பெருமாள் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இக் கோயிலில் பங்குனி உற்சவம் மார்ச் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :4 ஏப்ரல் 2014, 10:29 am

முத்துகுமார்

திருநெல்வேலி நகரத்தில் உள்ள கரியமாணிக்கப் பெருமாள் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இக் கோயிலில் பங்குனி உற்சவம் மார்ச் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிழா நாள்களில் அன்ன வாகனம், சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், சேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மார்ச் 30-ம் தேதி கருடசேவையும், சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றது.அதற்கு மறுநாள் 6-ம் திருநாளில் வெள்ளை யானை வாகனத்திலும், 7-ம் திருநாளில் இந்திர விமானத்திலும், 8-ம் திருநாளில் குதிரை வாகனத்திலும், 9-ம் திருநாளில் சந்திரபிரபை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்தார்.

10-ம் திருநாளான வெள்ளிக்கிழமை காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதன்பின்பு சுவாமி தேருக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்புத் தீபாராதனை முடிந்ததும், கோவிந்தா-கோபாலா என்ற பக்தி முழக்கங்களுடன் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். ஒரு மணி நேரத்தில் தேர் நிலையை அடைந்தது. தேரோட்டத்தையொட்டி பக்தர்களுக்கு மோர், பானக்காரம், குளிர்பானங்களை பொதுமக்கள் விநியோகித்தனர்.

11-ம் திருநாளான சனிக்கிழமை (ஏப்.5) குறுக்குத்துறையில் வைத்து காலையில் தீர்த்தவாரியும்,  மாலையில் பல்லக்கில் சுவாமி வீதியுலாவும் நடைபெறுகின்றன. 12-ம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) கலசமாற்று பூஜையும், சந்திரபிரபை வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது. திங்கள்கிழமை (ஏப்.7) மாலையில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை (ஏப்.8) ராமநவமியையொட்டி சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலையில் ஹனுமந்தவாகனத்தில் சுவாமி திருவீதியுலா வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.