வரும் ஏப்.12ம் தேதி இரவு திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித்தேரோட்டமும், ஏப்.13ம் தேதி பங்குனி உத்திரத் தேரோட்டமும் நடைபெறவுள்ளது. ஏப்.16 அன்று திருக்கொடியிறக்கப்பட்டு விழா நிறைவுபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏ., வேணுகோபாலு, ஒன்றியகுழு தலைவர் செல்லசாமி, கோட்டாட்சியர் சுந்தர்ராஜ், டிஎஸ்பி., சண்முகசுந்தரம், நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) இராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, சித்தனாதன் சன்ஸ் பழனிவேலு, கந்தவிலாஸ் செல்வக்குமார், பிரசாதஸ்டால் ஹரிஹரமுத்து, திருப்பூர் லாட்ஜ் மகேஷ்குமார், காண்ட்ராக்டர் நேரு, சங்கராலயம் பாலசுப்ரமணியசாமிகள், புஷ்பகைங்கர்ய சபா செயலர் மருதசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.