15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சேலத்தில் இன்று திமுக தலைவர் கருணாநிதி பிரசாரம்

சேலத்தில் திமுக தலைவர் கருணாநிதி திங்கள்கிழமை இரவு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

News image
Updated On :7 ஏப்ரல் 2014, 2:26 am

சேலத்தில் திமுக தலைவர் கருணாநிதி திங்கள்கிழமை இரவு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சேலம் தொகுதியில் போட்டியிடும் தங்களது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் ஏற்கெனவே சேலத்தில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளனர்.

 இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி அண்மையில் கோவையில் தனது முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். சேலம் திமுக வேட்பாளர் எஸ்.உமாராணியை ஆதரித்து போஸ் மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் திங்கள்கிழமை இரவு அவர் உரையாற்ற உள்ளார்.

 இதற்காக ஈரோட்டில் இருந்து திங்கள்கிழமை மாலை புறப்படும் அவர், பள்ளிப்பாளையம், சங்ககிரி உள்ளிட்ட இடங்களில் வாகனம் மூலம் பிரசாரம் செய்கிறார். இரவு 7.30 மணியளவில் சேலம் வரும் அவர் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

 இதற்காக போஸ் மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மைதானம் முழுவதிலும் கொடிகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பிரசாரப் பொதுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையிலான திமுகவினர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.